மின்கம்பம் விழுந்து விபத்து - மின் ஊழியர் பலி

மின்கம்பம்  விழுந்து விபத்து -  மின் ஊழியர் பலி
X

முத்துக்குமார் 

மதுரை வில்லாபுரம் பூ மார்க்கெட் அருகே வாகனம் மோதி பழுதாகி இருந்த மின் கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் ஊன்றும் பணியில் நேற்றிரவு மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது புதிய மின்கம்பத்தை நிலை நிறுத்துவதற்காக அருகில் இருந்த மரத்தின் மீது கயிறு கட்டி இழுத்துக் கொண்டு இருந்தபோது மரம் சாய்ந்ததில் மின்கம்பம் அருகில் இருந்த சுவற்றில் விழுந்தது, இதில் சுவரும் இடிந்து அருகில் நின்று கொண்டிருந்த மின்வாரிய ஊழியர் முத்துக்குமாரின் தலையில் விழுந்து படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக முத்துக்குமாரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முத்துக்குமார் நேற்று இரவு உயிர் இழந்தார். முத்துக்குமார் மதுரை அவனியாபுரத்தில் வசித்து வந்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு பணி நிரந்தரம் பெற்ற இவருக்கு சரண்யா என்கிற மனைவி மற்றும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணியின் போது சுவர் தலை மீது விழுந்து மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story