ஆபத்தான நிலையில் மின் கம்பங்கள் - சீரமைக்க கோரிக்கை
ஆலம்பாடி பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் பல இடங்களில் மின் கம்பங்களில் பொருத்தப்பட்டிருக்கும் மின் கம்பங்கள்,மீட்டர் பாக்ஸ் பெட்டிகள் மழையினால் துருப் பிடித்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் எதிர்பாராத விதமாக இந்த ஆபத்தான நிலையில் உள்ள பெட்டிகளில் இருந்து மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்டு சேதமடைந்த பெட்டிகள் 2 மற்றும் 3 அடி உயரத்தில் பொருத்தப்பட்டுள்ளது. எனவே கவனக்குறைவாக அந்த பெட்டிகளை தொடும் பொதுமக்களின் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு ஏற்படும். மின்கம்பங்கள், துணைமின் நிலையங்கள்,மின்மாற்றிகள்,தெருவிளக்குகள் போன்ற மின் இணைப்புகளில் இருந்து விலகி இருப்பது அவசியம் ஆனால் இது போன்ற சாலைகளிலுள்ள கம்பங்களில் வெளிப்படையாக சேதமடைந்த பெட்டிகள் உள்ளதுவிபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இவ்வாறு சேதமடைந்த பெட்டிக்குள் மழைநீர்தேங்குவதால் இதனை தொடும் மின்வாரிய ஊழியர்களுக்கு கூட பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தெருக்களிலோ அல்லது பொது இடங்களிலோ உள்ள இது போன்ற மின் கம்பங்களை சரிபார்த்து, சோதித்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் இது போன்றகவனிப்பாறற்று கிடக்கும் சேதமடைந்த மின்கம்பங்கள்,பழைய அல்லது மழையால் துருப்பிடித்த மின் இணைப்பு பெட்டிகளையும், மின் கம்பிகளையும் சீரமைக்க வேண்டும், இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story