குறைந்த கட்டணத்தில் மின்சார ரயில் சேவை - திருச்சி கலெக்டரிடம் மனு

குறைந்த கட்டணத்தில் மின்சார ரயில் சேவை -  திருச்சி கலெக்டரிடம் மனு

மனு அளிக்க வந்தவர்கள் 

திருச்சியில் துவங்கப்பட இருக்கும் மெட்ரோ ரயில் சேவையை ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில் குறைந்த கட்டணத்தில் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக தினந்தோறும் மக்கள் அன்றாட வேலைக்கு செல்லும் போது பயணம் செய்வதில் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும் பள்ளி மாணவர்களும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். திருச்சியில் மத்திய, மாநில அரசுகள் மூலமாக மெட்ரோ ரயில் சேவை தொடங்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டாலும் அதில் வசதி படைத்தவர்கள் மட்டுமே அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்ய முடியும். எனவே சென்னையைப் போன்று திருச்சி மாவட்டத்தை சுற்றி 50 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மின்சார ரயில் சேவை திட்டத்தை கொண்டு வரும் பட்சத்தில் அன்றாட கூலித் தொழிலாளர்களும், நடுத்தர மக்களும். பள்ளி மாணவர்களும் மிகுந்த பயனடைவார்கள். இதற்கு குறைந்த கட்டணம் வசூலிப்பதால் மக்களுக்கும் சிரமம் இருக்காது. ஆகவே மின்சார ரயில் சேவை கொண்டு வருவதற்கு தாங்கள் மத்திய, மாநில அரசுகள் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

Tags

Next Story