மின்கல வாகனங்கள் வழங்கும் விழா

மின்கல வாகனங்கள் வழங்கும் விழா

மின்சார வண்டி

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மூலம் 6 மின்கல வண்டிகள் வழங்கப்பட்டன.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சி, சந்தைதோப்பு பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பென்னாகரம் பேரூராட்சிக்கு மின் கலன் மூலம் இயங்கும் 6 வாகனங்களை பயன்பாட்டிற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று கொடியசைத்து, தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் முனைவர். பழனியப்பன், தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் டி.ஆர்.கீதாராணி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) .குருராஜன், பென்னாகரம் பேரூராட்சித் தலைவர் கி. வீரமணி, உள்ளிட்ட பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலர் முனைவர்.சு.கீதா உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர் .

Tags

Next Story