மின்னல் தாக்கி 1 லட்சம் மதிப்பிலான மின்சாரப் பொருட்கள் சேதம்

மின்னல் தாக்கி 1 லட்சம் மதிப்பிலான மின்சாரப் பொருட்கள் சேதம்
பைல் படம்
சங்கராபுரம் பகுதியில் மின்னல் தாக்கி ரூ. 1 லட்சம் மதிப்புள்ள மின் சாதனப் பொருட்கள் சேதமடைந்தன.
சங்கராபுரம் பகுதியில் மின்னல் தாக்கி ரூ. 1 லட்சம் மதிப்புள்ள மின் சாதனப் பொருட்கள் சேதமடைந்தன. சங்கராபுரம் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் சங்கராபுரம் பகுதியில் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. மின்னல் தாக்கி, எஸ்.குளத்துார் கிராமத்தில் உள்ள அக்ரகார தெரு மற்றும் அஞ்சலக தெருக்களில் உள்ள வீடுகளிலிருந்த மின் விசிறி, இன்வென்டர், டி.வி., கம்யூட்டர், லேப்டாப், உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தது. அதன் மதிப்பு 1 லட்சம் ரூபாய் ஆகும்.

Tags

Next Story