சிவகங்கையில் கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்
சிவகங்கையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீ மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை ஆட்சியராகப் பகுதியில் உள்ள மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். அரசாணை எண் 100-ஔ முத்தரப்பு ஒப்பந்தத்தில் உள்ள அநீதிகளை களைந்து அரசு உத்திரவாதத்துடன் கூடிய புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்திட வேண்டும்.
அரசு ஊழியர்கள் பெறுகின்ற குடும்பநல நிதி ரூ. 5 லட்சத்தை மின்வாரியத்திலும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சுமார் 50க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story