5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

சிவகங்கையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் துணைமின் நிலையங்களில் செயற்பொறியாளர், உதவி செயற் பொறியாளர் பணியிடங்களை ரத்து செய்யும் பிபி எண் 4-ஐ ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு மின் வாரியத்தை மூன்றாக பிரிக்கும் அரசாணை எண் 6 மற்றும் 7-ஐ திரும்ப பெற வேண்டும். பிரதமர் சூரிய மின் திட்டத்தை செயல்படுத்த மின் ஊழியர்களை நிர்பந்தப்படுத்த கூடாது. தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் அதற்கான உபகரணங்களை ஊழியர்களுக்கு வழங்காமல் எப்படி திட்டத்தை செயல்படுத்த முடியும் ஆகையால் மொபைல் ஆஃப் மூலம் கணக்கீடு செய்ய ஊழியர்களுக்கு டேப் மற்றும் நெட்வொர்க் வசதியுடன் சிம் கார்டு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story