லாரி மோதி எலெக்ட்ரிசியன் உயிரிழப்பு - பொதுமக்கள் சாலை மறியல்

லாரி மோதி  எலெக்ட்ரிசியன் உயிரிழப்பு - பொதுமக்கள் சாலை மறியல்

சாலை விபத்து 

நஞ்சை ஊத்துக்குளியில் லாரி மோதி எலெக்ட்ரிசியன் உயிரிழந்த சம்பவத்தில் விபத்தை ஏற்படுத்திய லாரியை முற்றுகையிட்டு பிரேதத்தை எடுக்க விடாமல் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளியில் தனியார் தீவன ஆலை இயங்கி வருகிறது. இந்த தீவன ஆலையில் இருந்து வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு கால்நடை தீவனம் கொண்டு செல்வதற்காக ஆலைக்கு சொந்தமான லாரிகள் சென்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை ஆலையிலிருந்து லாரி நஞ்சை ஊத்துக்குளி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த கோவிந்த நாயக்கன்பாளையத்தை சேர்ந்த பிரபு என்ற எலக்ட்ரீசியன் வந்தபோது நிலைத்திடுமாரி லாரியில் சிக்கியுள்ளார். இதில் லாரி எலக்ட்ரீசியன் மீது ஏறி சென்றதில் சம்பவ இடத்திலேயே வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் விபத்தை ஏற்படுத்திய லாரியை முற்றுகையிட்டு பிரேதத்தை எடுக்க விடாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மொடக்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்து மொடக்குறிச்சி தாசில்தார் இளஞ்செழியன் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு சடலத்தின் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இதில் இறந்த வாலிபரின் குடும்பத்திற்கு ஆலையின் சார்பில் நிவாரணம் வழங்கப்படும் என்றும் விபத்து நடந்த பகுதியில் வேகத்தடை அமைக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. இதனை அடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story