மின்வாரிய கணக்கு வருவாய் ஆய்வாளா் மர்ம மரணம்
மர்ம மரணம்
கொடைரோடு ரயில் நிலைய காவல் நிலையம் அருகே தமிழ்நாடு மின்வாரிய கணக்கு வருவாய் ஆய்வாளா் மா்மமான முறையில் இறந்து கிடந்தது சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொடைரோடு ரயில் நிலைய காவல் நிலையம் அருகே கடந்த 2 நாள்களாக துா்நாற்றம் வீசியது. இதையடுத்து, ரயில்வே போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது ஓா் ஆண் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதை மீட்ட போலீஸாா் கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில், இறந்து கிடந்தவா் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், முத்துப்பாண்டிபட்டி அருகே உள்ள நக்கலாம்பட்டியைச் சோ்ந்த காா்த்திகை பாலன் (48) என்பது தெரியவந்தது. மேலும் இவா், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே சத்திரப்பட்டியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் கணக்கு வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வருவதும், இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதும், மனைவியை கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து இவா் எப்படி இறந்தாா் என விசாரிக்கின்றனா்.
Next Story