மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம்!

மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம்!

பைல் படம் 

தூத்துக்குடி அருகே மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி அருகேயுள்ள புதியம்புத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக பணியாற்றியவர் பாலமுருகன். இவர் மீது பணிகளை சரிவர செய்யாதது, நுகர்வோரின் குறைகளை நிவர்த்தி செய்யாதது உள்ளிட்ட புகார்கள் மின்வாரியத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து பாலமுருகன் கடந்த மாதம் 30-ந்தேதியில் இருந்து பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தூத்துக்குடி மின்சார வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story