மின்வாரிய அதிகாரி போக்சோ சட்டத்தில் கைது
கைது
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை இ.பி.காலனியை சேர்ந்தவர் கந்தசாமி(59). இவர் நிலக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் மகள் உறவு கொண்ட உறவினர் சிறுமி தங்கியுள்ளார்.சம்பவத்தன்று இரவு சிறுமியை கந்தசாமி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தார்.இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசாருக்கு எஸ்.பி உத்தரவிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கந்தசாமியை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags
Next Story