நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்!

நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்!

குறைதீர் கூட்டம்

மின்நுகர்வோர் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று செயற்பொறியாளர் பிரேம் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
கீரனுார் கோட்டத்துக்கு உட்பட்ட கீரனுார், விராலிமலை, குன்றாண்டார்கோவில், கிள்ளுக்கோட்டை, மாத்துார், தொண்டைமான்நல்லுார் உள்ளடக்கிய பகுதிகளுக்கான மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் அம்மாசத்திரம் துணைமின் நிலைய வளாகத்தில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் புதுக்கோட்டை மேற்பார்வை பொறியாளர் அசோக் குமார் தலைமையில் நாளை (11ம் தேதி) காலை 11 மணி முதல் ஒரு மணி வரை நடக்கிறது. இதில் மின்நுகர்வோர் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று செயற்பொறியாளர் பிரேம் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story