சேலத்தில், நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
தமிழ்நாடு மின்சார வாரியம்
சேலம் கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் குணவர்த்தினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் உடையாப்பட்டி காமராஜர் காலனியில் கிழக்கு கோட்ட மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. கூட்டத்துக்கு சேலம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமை தாங்குகிறார். இதில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story