மின்சார சிக்கன வார விழா - சேலத்தில் விழிப்புணர்வு ஊர்வலம்

மின்சார சிக்கன வார விழா - சேலத்தில் விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு பேரணி 

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மின்சார சிக்கன வார விழா கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி மின் பகிர்மான வட்டம் கிழக்கு கோட்டம் சார்பில் உடையாப்பட்டியில் உள்ள மேற்பார்வை பொறியாளர் மத்திய அலுவலகத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதை மேற்பார்வை பொறியாளர் தண்டபாணி, கிழக்கு கோட்ட பொறியாளர் குணவர்த்தினி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த ஊர்வலம் உடையாப்பட்டி மெயின்ரோடு, அம்மாபேட்டை ரவுண்டானா வழியாக வந்து காமராஜர் காலனியை சென்றடைந்தது. அப்போது ''மின்சாரம் நாட்டின் ஆதாரம்'', ''மின் சிக்கனம் தேவை இக்கணம்'', ''மின்சாரத்தை அளவோடு பயன்படுத்தி வளமோடு வாழ்வோம்'' என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தி சென்றனர். மேலும் இதுதொடர்பான துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் சேலம் கிழக்கு கோட்டத்தை சேர்ந்த பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story