விடிய ,விடிய நடந்த மின் விநியோக சீரமைப்பு பணிகள்

விடிய ,விடிய நடந்த மின் விநியோக சீரமைப்பு  பணிகள்

சீரமைப்பு பணிகள் 

திருச்செந்தூா் பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த மின் கம்பங்களை இரவு நேரத்திலும் பணியாற்றி மின்ஊழியா்கள், மின் விநியோகத்தை சீா்செய்தனா்.

திருச்செந்தூா் பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த மின் கம்பங்களை இரவு நேரத்திலும் பணியாற்றி மின்ஊழியா்கள், மின் விநியோகத்தை சீா்செய்தனா். கடந்த டிச. 17 மற்றும் 18-ஆம் தேதி பெய்த பெருமழை மழையால் ஆறுமுகனேரி துணை மின் நிலையத்தை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அங்கிருந்து திருச்செந்தூருக்கு வரக்கூடிய மின்விநியோகம், துண்டிக்கப்பட்டது. இதனால் இரு நாள்கள் திருச்செந்தூரில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனா்.

இதனையடுத்து கல்லாமொழி துணை மின்நிலையத்திலிருந்து திருச்செந்தூா் பகுதிக்கு மின்விநியோகம் வழங்கப்பட்டது. இருப்பினும் மின்னழுத்த குறைபாடு காரணமாக திருச்செந்தூா் பகுதியில் சுழற்சி முறையில் மின்சாரம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், கல்லாமொழியிலிருந்து திருச்செந்தூா் வரக்கூடிய மின்வயா் ஆலந்தலை சூசைநகா் பகுதியில் அறுந்து விழுந்தது. இதனையடுத்து மின்வாரிய உதவி பொறியாளா் முத்துராமன் தலைமையில் மின்ஊழியா்கள் இரவு நேரமாக இருந்தபோதும், வெள்ளம் சூழ்ந்த மின்கம்பத்தில் ஏறி சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா்.இதேபோல திருச்செந்தூா் ஆவுடையாா்குளம் அருகில் பனைமரம் விழுந்து மின்கம்பம் உடைந்ததால் அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது. அதையடுத்து மின் ஊழியா்களால் புதிய மின்கம்பம் நடப்பட்டு மின்விநியோகத்தை சீா்செய்தனா்.

Tags

Next Story