மின் கட்டண உயர்வு: 12ம் தேதி மனித சங்கிலி போராட்டம்
கோவையில் மின் கட்டண உயர்வை முன்னிட்டு வரும் 12ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது.
கோவை: தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு,மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாக்ட் ஜேம்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர் தமிழகத்தில் உள்ள தொழில் துறை நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு திரும்ப பெற வேண்டும் என்பது பிரதான கோரிக்கை எனவும் இதில் கடந்த தொண்ணூறு நாட்களாக எட்டு கட்ட போராட்டம் நடத்தியுள்ளதாக தெரிவித்தார்.
தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து துறை அமைப்புகளுடன் இணைந்து இந்த போராட்டங்களை செய்து வருவதாக கூறியவர் இதற்கு முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஐம்பது சதவீதம் நிறைவேற்றபட்டுள்ளதாக தெரிவித்தார்.பீக் ஹவர் மின் கட்டணமாக 3500 ரூபாய் கட்டாயமாக வசூலிக்கப்பட்டு வருவதாகவும் அந்த தொகையை தவிர்க்க வேண்டும் என்றும் அதே போன்று சோலார் மின் உற்பத்தியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் த்ரீ இன் ஒன் என்ற மின் கட்டண விகிதாச்சாரத்தை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
கிரில் வெல்டிங் தொழிலில் 12கிலோ வாட் மின்கட்டணத்திற்கு இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கபடுவதாகவும் இதனை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 12ம் தேதி 38 மாவட்டங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.