மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

பெரம்பலூர் பாடலூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் அழகன் மகன் சுப்ரமணியன். இவர் கேபிள் டிவி ஒயர்கள் இழுத்துக்கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறார், இவரது மனைவி சுமிதா இவர்களுக்கு கிஷோர் கீர்த்தி என்ற இரண்டு பிள்ளைகள் இருந்துள்ளனர், இந்நிலையில், பீல்வாடி பகுதியில் தனசேகர் என்பவர் நடத்தி வரும் MS கேபிள் டிவிக்கு கேபிள் இழுக்கும் பணிக்காக ராமச்சந்திரன் என்பவர் மூலம் பாடலூரில் இருந்து சுப்பிரமணியனை வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்பொழுது அருமடல் பீல்வாடி சாலையில். ராமச்சந்திரன், சுப்பிரமணியன் ஆகியோர் கேபிள் டிவிக்கு ஒயர்கள் கொண்டு செல்ல மின் கம்பங்கள் வழியாக கேபிள் டிவி ஒயர்களை பொருத்தியுள்ளனர் அப்பொழுது சுப்பிரமணியன் அலுமினியம் ஏணி மூலம் மின்கம்பத்தில் ஏறி கேபிள் டிவி ஒயரை கட்டும் பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சுப்ரமணியன் உயிரிழந்தார், இதுகுறித்து சம்பவம் அறிந்த மருவத்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சுப்பிரமணியன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் உயிரிழந்த சுப்பிரமணியன் உறவினர்கள், முறை கேடாக மின்கம்பத்தின் வழியாக கேபிள் டிவி ஒயர்களை அமைக்க வலியுறுத்திய அதன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் மேலும் சுப்ரமணியனுக்கு உரிய இழப்பீடு பெற்று தரக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ரமேஷ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ரங்கநாதன் கோகுலகிருஷ்ணன் செல்லதுரை செல்லமுத்து ஆகியோருடன் சுப்பிரமணியன் ஆகியோருடன் உறவினர்கள், அரசு மருத்துவமனையில் சுப்ரமணியன் உடலை வாங்க மருத்தனர், இதைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story