மின்மய பராமரிப்பு: ரயில் போக்குவரத்தில் மாற்றம்

மின்மய பராமரிப்பு: ரயில் போக்குவரத்தில் மாற்றம்

மதுரை சந்திப்பு

மின்மய பராமரிப்பு காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காரைக்குடி ரயில் நிலையத்தில் மின் தடங்களை பராமரிப்பதற்காக உள்ள சிறப்பு ரயிலை நிறுத்தும் வசதி ஞாயிற்றுக்கிழமை (மே 19) அன்று ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்காக தனி ரயில் பாதை அமைத்து தற்போது உள்ள ரயில் பாதைகளோடு இணைக்கும் வேலை நடைபெற உள்ளது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

ராமேஸ்வரம் - புவனேஸ்வர் ரயில் (20895) ஞாயிற்றுக்கிழமை அன்று காரைக்குடி வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக மானாமதுரை, மதுரை, திண்டுக்கல் வழியாக மாற்று பாதையில் இயக்கப்படும். மேலும் அன்றைய தினம் திருவாரூர் - காரைக்குடி ரயில் (06197) பெரிய கோட்டை வரையிலும் திருச்சி - காரைக்குடி - திருச்சி ரயில்கள் (06829/06126) செட்டிநாடு ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.

அன்றைய தினம் காரைக்குடி - திருச்சி - காரைக்குடி ரயில்கள் (06830/06125) மற்றும் திருச்சி - ராமேஸ்வரம் - திருச்சி ரயில்கள் (16849/16850) முழுமையாக ரத்து செய்யப்படும். அன்றைய தினம் காரைக்குடி - திருவாரூர் ரயில் (06198) காரைக்குடியில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படுவதற்கு பரலாக இரவு 7 மணிக்கு ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும்.

Tags

Next Story