மின்னணு இயந்திரம் கோளாறு

மின்னணு இயந்திரம் கோளாறு

மின்னணு வாக்கு இயந்திரங்களில் கோளாறு 

கள்ளக்குறிச்சி மாவட்டம்,நரசிங்கபுரம் நகராட்சி விநாயகபுரம் ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் மின்னணு இயந்திரங்களில் கோளாறு ஏற்ப்பட்டது.

கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, 6 சட்டசபை தொகுதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள், தபால் ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. அதன்படி ஆத்துார் சட்டசபை தொகுதியில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி நடந்தது.

நரசிங்கபுரம் நகராட்சி விநாயகபுரம் ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டுகளை எண்ண முயன்றபோது, இயந்திரம் பழுதாகி இருந்தது. இதனால் அதில் பதிவாகி இருந்த, 103 ஓட்டுகளை எண்ண முடியவில்லை. அதே போல, கெங்கவல்லி சட்டசபை தொகுதியில், நாவலுார் ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட இயந்திரத்தில், 846 ஓட்டுகள் பதிவாகி இருந்தன. அந்த இயந்திரமும் பழுதாகி இருந்ததால், எண்ண முடியவில்லை.

இந்த இரு இயந்திரங்கள் குறித்து வேட்பாளர்களின் முகவர்களிடம், தேர்தல் அலுவலர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த இயந்திரங்கள், மாவட்ட தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டன. பின், அந்த இயந்திரங்களில் இணைத்துள்ள, 'விவிபேட்'டில் பதிவான ஓட்டுச்சீட்டுகளை வைத்து, எண்ணும் பணி மேற்கொள்ளப்பட்டதால், பிரச்னை ஏதும் இல்லை என, தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.

Tags

Next Story