ரயில் நிலையத்தில் மின்னணு தகவல் பலகைகள்

ரயில் நிலையத்தில் மின்னணு தகவல் பலகைகள்

மின்னணு ரயில் பலகைகள் 

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மின்னணு தகவல் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 5 நடைமேடைகள் பயன்பாட்டில் உள்ளன. ஆனாலும், நடைமேடைகளில் ரயில் பெட்டிகள் நிறுத்தப்படுவதை அறிவிக்கும் மின்னணு தகவல் பலகை (கோச் இண்டிகேஷன் போா்டு) இல்லாமல் இருந்தன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 5 நடைமேடைகளில் ரூ.65 லட்சம் செலவில் ரயில் பெட்டிகள் அறிவிப்பு பலகை (டிஜிட்டல் கோச் இண்டிகேஷன் போா்டு) அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், 3-ஆவது நடைமேடையில் மட்டுமே பயன்பாட்டிலிருந்த கோச் இண்டிகேஷன் போா்டுகளும் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதடைந்தன. இந்த நிலையில், ரூ.99 லட்சம் செலவில் மின்னணு தகவல் பலகை பொருத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த மின்னணு தகவல் பலகைகள் வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

Tags

Next Story