மின்னொளி கபடி போட்டி: குருகாட்டூர் அணி கோப்பையை வென்றது!

மின்னொளி கபடி போட்டி: குருகாட்டூர் அணி கோப்பையை வென்றது!

நாசரேத் அருகே மணிநகரில்  நடந்த மின்னொளி கபடி போட்டியில் குருகாட்டூர் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.


நாசரேத் அருகே மணிநகரில்  நடந்த மின்னொளி கபடி போட்டியில் குருகாட்டூர் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள மணிநகரில் காமராஜர் ஆதித்தனார் கழகம், மணி நகர் 3 ஸ்டார் கபடி கிளப் மற்றும் ஊர் மக்கள் சார்பில் மாவீரன் கராத்தே செல்வின் நாடார் நினைவு கோப்பைக்கான இரண்டாம் ஆண்டு மின்னொளி கபடி போட்டி 2 நாட்கள் நடந்தது. போட்டியை நாசரேத் போலீஸ் சப்_ இன்ஸ்பெக்டர் வைகுண்டதாஸ் துவக்கி வைத்தார் . மொத்தம் 64 அணிகள் பங்கேற்றனர். இறுதிப்போட்டியில் குருகாட்டூர் ஜாலி பிரண்ட்ஸ் கிளப் அணியும், காயல்பட்டினம் பூந்தோட்டம் அணியும் மோதின. இதில் குருகாட்டூர் அணி வெற்றி பெற்று கோப்பை பரிசை தட்டிச் சென்றது. போட்டியின் நடுவர்களாக பொன்னையா, ஜெகந்த், ஜானகிராமன், அசோக்குமார் ஆகியோர் செயல்பட்டனர்.பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு தூத்துக்குடி மாவட்ட காமராஜர் ஆதித்தனார் கழக செயலாளரும், நாசரேத் பேரூராட்சி 3வது வார்டு கவுன்சிலருமான ஐஜினஸ்குமார் தலைமை வகித்து வெற்றி பெற்ற குருகாட்டூர் ஜாலி பிரண்ட்ஸ் கிளப் அணிக்கு கோப்பை பரிசை வழங்கினார்.

ரொக்கப்பணம் ரூ.7 ஆயிரத்தை நாசரேத் நகர அதிமுக செயலாளர் கிங்சிலி வழங்கினார். 2 வது இடத்தை பிடித்த காயல்பட்டினம் அணிக்கு பரிசு மற்றும் கோப்பையை நாசரேத் புஷ்பம் அன்கோ சார்பில் வழங்கப்பட்டது. இதில் நாசரேத் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வைகுண்டதாஸ், காமராஜர் ஆதித்தனார் கழக ஒன்றிய செயலாளர் டேனி ஜெபசிங் மாவட்ட மாணவரணி செயலாளர் ஸ்ரீராம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணை தலைவர் விமல் ,ஒன்றிய வர்த்தக அணி இணைச் செயலாளர் மகேஷ், ஒன்றிய மாணவர் அணி துணைச் செயலாளர் ஆபிரகாம், நகர மாணவர் அணி துணைச் செயலாளர் வினோத், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப துணைச் செயலாளர் அந்தோணி, இணைச் செயலாளர் தினேஷ், இளைஞர் அணி ராஜக்குமார் மற்றும் காமராஜர் ஆதித்தனார் கழக நிர்வாகிகள், மணிநகர் ஊர் பெரியவர்கள் மனோகரன், விஜி, முருகேசன், இந்து மகாசபா செயலாளர் இராமர், 3 ஸ்டார் கபடி கிளப்பைச் சார்ந்த ராஜன், இசக்கிமுத்து, செல்லத்துரை ,ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story