மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் செயல்விளக்க மையம்
தூத்துக்குடியில் பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் செயல்விளக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் செயல்விளக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவிக்கையில், "தூத்துக்குடி மாவட்டத்தில், 2024 - பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் ஒப்புகைச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் ஆகியவற்றினை முதல் நிலை சரிப்பார்ப்பு பணி முடிவுற்று, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பறையில் இருந்து, இயந்திரங்களை எடுத்து, தேர்தல் பயிற்சி மற்றும் விழிப்புணர்வுக்காக, அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு கொண்டு செல்லும் பணியானது கடந்த 14ம் அன்று நடைபெற்றுள்ளது.
மேற்படி இயந்திரங்களில் தேர்தல் பயிற்சி/விழிப்புணர்விற்கான மஞ்சள் கலர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, தேர்தல் ஆணைய இஎம்எஸ் இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களின் விளக்க மையம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ வாக்கு பதிவு அலுவலர் / சார் ஆட்சியர்/ வருவாய் கோட்டாட்சியர் அலுவலங்களில் இன்று முதல் அமைக்கப்பட உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தகவலை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மின்னணு வாக்கு பதிவு இபந்திரங்களின் விளக்க மையத்தை கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா உடனிருந்தார்.