நீலகிரி நாடாளுமன்ற தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்!

நீலகிரி நாடாளுமன்ற தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்!

 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட இடங்களுக்கு அனுப்பும் பணி துவங்கியது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள 689 வாக்குச்சாவடி மையங்களுக்கு 825 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார். நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதிகளுக்கு கணினி மூலம் சீரற்றமயமாக்கல் பணிகள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், அருணா தலைமையில் நடந்தது. இதையடுத்து மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் நடந்தது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அருணா செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்ற பொதுத்தேர்தல்-2024 முன்னிட்டு, முதற்கட்டமாக இன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதிகளுக்கு கணினி மூலம் சீரற்றமயமாக்கல் பணிகள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்தது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி (108) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 239 வாக்குச்சாவடி மையங்களுக்கு, 286 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 310 வி.வி.பேட்., கருவிகள், கூடலூர் (109) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 224 வாக்குச்சாவடி மையங்களுக்கு, 268 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 291 வி.வி.பேட்., கருவி, குன்னூர் (110) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 226 வாக்குச்சாவடி மையங்களுக்கு, 271 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 293 வி.வி.பேட்., கருவி என நீலகிரி மாவட்டத்திலுள்ள 689 வாக்குச்சாவடி மையங்களுக்கு 825 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 894 விவிபேட் கருவியும் இன்று கணினி மூலம் சீரற்றமயமாக்கல் பணிகள் முடிக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட ஊட்டி பிரிக்ஸ் மேல்நிலைப்பள்ளி, கூடலூர் புனித தாமஸ் உயர்நிலைப்பள்ளி, குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரிக்கு அனுப்பி பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. தேர்தல் நேரத்தில் மண்டல குழுக்கள் அதனை வாக்குப்பதிவு மையங்களுக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்வார்கள். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கினை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்படுவதை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் நேரில் பார்வையிட்டார்.

Tags

Next Story