வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டது.

வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டது.

வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டது

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதியில் 272 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டது.
கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 10 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.இதனால் அங்கே ஒரு மின்னணு எந்திரம் பயன்ப டுத்தப்படுகிறது. ஏற்கனவே பாராளுமன்ற தொகுதிக்கு 2 மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தபட உள்ள நிலையில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒரு மின்னணு எந்திரம் பயன்படுத்துவதால் வாக்குச்சாவடிகளில் 3 மின்னணு எந்திரங்கள் பொருத்தப்படுகிறது. இதற்கான மின்னணு எந்திரங்கள் மேல்புறம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து இன்று வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. விளவங்கோடு தொகுதியை பொறுத்தமட்டில் 272 வாக்குச்சாவடிகள் உள்ளது. இந்த வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது.

Tags

Next Story