தொடக்கக்கல்வி பட்டய தேர்வு - ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தொடக்கக்கல்வி பட்டய தேர்வு - ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தொடக்கக்கல்வி பட்டய தேர்வு எழுத தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தொடக்கக்கல்வி பட்டய தேர்வு எழுத முதல் மற்றும் 2-ம் ஆண்டு தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற சான்றிதழ்களின் நகல்களை இணைத்து வெப் கேமரா மூலம் புகைப்பட விண்ணப்பங்களை தேர்வு கட்டணத்துடன் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள தேதிகளில் விண்ணப்பிக்காத தேர்வர்கள் ரூ.1,000 கூடுதல் கட்டணம் செலுத்தி சிறப்பு அனுமதி திட்டத்தில் வருகிற 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சு.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story