தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் அரசாணை 243யை ரத்து செய்ய கோரியும், மாறுதல் கலந்தாய்வை ரத்து செய்ய கோரியும் சிவகங்கை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் சங்கத்தினர் மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு உறுப்பினர் மதியழகு, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் தனபால், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் செல்வகுமார், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன், தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் பாண்டியராஜன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அருள் கலந்துகொண்டனர். மறியலில் அரசாணை 243 தொடக்கக் கல்வியில் பணியாற்றும் 90 சதவீதம் ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்த அரசாணையை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும்

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை ரத்து செய்து திருத்திய கலந்தாய்வு பட்டியலை வெளியிட வேண்டும். பதவி உயர்வு வழங்கிய பின்புதான் மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து, மாவட்ட கல்வி அலுவலர் மாரிமுத்து, சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் முடிவின் அடிப்படையில் அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆசிரியர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story