குளத்தில் ஆனந்த குளியல் போட்ட மங்கலம் யானை!

குளத்தில் ஆனந்த குளியல் போட்ட மங்கலம் யானை!

மங்கலம் யானை

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் குளத்தில் ஆனந்த குளியல் போட்ட மங்கலம் யானை.
கும்பகோணத்தில் பிரசித்திப்பெற்ற ஆதி கும்பேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் கோயிலுக்குச் சொந்தமான மங்களம் யானை (56) உள்ளது கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு யானை மங்களம் ஆசிபுரிந்து வருவதோடு கோவிலில் நடக்கும் அனைத்து விழாக்களுக்கும் யானையின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. தற்போது வெயிலில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இன்று மங்களம் யானை கோயில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள நவீன நீச்சல் குளத்தில் கோடை வெப்பம் தணிக்க குளிக்க வந்த யானை மங்களம் நீச்சல் குளத்திலிருந்து வெளியே வர மறுத்தது. யானை பாகம் பலமுறை அழைத்தும் வர மறுத்தது தண்ணீரில் மேலே பீச்சு அடித்துக் கொண்டும் குளித்தது. மங்கலம் யானை குளியல் காட்சியை சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் திரண்டு நின்று, ஆர்வமாக ரசித்து மகிழ்ந்தனர்.

Tags

Next Story