குமரியில் யானைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு
யானை கணக்கெடுப்பு பணி
மத்திய வனத்துறை உத்தரவின்படி தென் மாநிலங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டது. இதன்படி தமிழக வனத்துறை சார்பில் ஒருங்கிணைந்த யானை கணக்கெடுப்பு கடத்த 23ஆம் தேதி தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வனப்பகுதி 19 பிளாக்குகளாக பிரிக்கப்பட்டு யானைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் பிரசாந்த் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த கணக்கெடுப்பில், தன்னார்வலர்களும் பங்கேற்றனர்.
முதல் நாள் லத்தி (சாணம்) மூலமும், இரண்டாவது நாள் காலடி தடங்கள் மூலமாகவும், மூன்றாம் நாள் நீர்நிலைகள் காத்திருந்து நேரில் காணுதல் என மூன்று முறைகளில் கணக்கெடுப்பு படி நடைபெற்றது. இது குறித்து மாவட்ட வன அலுவலர் கூறுகையில், _ குமரியில் யானைகள் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்து, அதன் அறிக்கை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த அறிக்கை சென்னையில் மாநில வனத்துறைக்கு அனுப்பப்பட்டு அனைத்து மாவட்ட அறிக்கைகள் மற்றும் விஞ்ஞான முறையின்படி அவர்கள் அறிவிப்பார்கள். குமரியில் கடந்தாண்டு கணக்கெடுப்பில் 49 யானைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.