கடையநல்லூா் வனப் பகுதியில் யானைகள் கணக்கெடுப்பு தொடக்கம்

கடையநல்லூா் வனப் பகுதியில் யானைகள் கணக்கெடுப்பு தொடக்கம்

பைல் படம்

கடையநல்லூா் வனப் பகுதியில் யானைகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது.

திருநெல்வேலி வனஉயிரினச் சரணாலயத்திற்கு உள்பட்ட கடையநல்லூா் வனச்சரக பகுதியில் யானைகள் கணக்கெடுக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. மாவட்ட வன அலுவலா் முருகன் உத்தரவின் பேரில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. கடையநல்லூா் வனச்சரகத்தில் 11 குழுக்கள், குற்றாலம் வனச்சரகத்தில் 5 குழுக்கள், சங்கரன்கோவில் வனச்சரகத்தில் 11 குழுக்கள், சிவகிரி வனச்சரகத்தில் 8 குழுக்கள் என மொத்தம் 35 குழுக்கள் மூலம் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

இதுகுறித்து கடையநல்லூா் வனசரக அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: கடையநல்லுாா் வனச்சரகத்தில் வனச்சரகா் (பொ) சிக்கந்தா்பாட்ஷா தலைமையில் வனவா்கள் முருகேசன், அம்பலவாணன், வனக்காப்பாளா்கள் ராஜா, மாதவன், சுரேஷ், மகாதேவன், முத்துசாமி, ஜோசுவா, சுகந்தி, பத்மாவதி, செல்லத்துரை உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது ஆண் யானை ஒன்று தூங்குவதை (படம்) குழுவினா் கண்டனா். கண்காணிப்பு கோபுரம் சென்று யானைகள் நடமாட்டத்தை கண்காணித்த பொழுது 3 குட்டி யானைகள் உள்பட சுமாா் 10 யானைகள் வனப்பகுதிக்குள் செல்வதை குழுவினா் பாா்த்தனா்.

மேலும் யானைகள் வனத்தை விட்டு வெளியே வராதவாறு வனப்பகுதிக்கு உள்ளே அவற்றை அனுப்பி வைத்தனா். இதில் நோ்கோட்டில் 2 கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்று யானைகளின் சாணங்களை கொண்டு அவை கணக்கிடும் பணி நடைபெறும். சனிக்கிழமை யானைகள் தண்ணீா் குடிக்க வரக்கூடிய இடங்களில் இருந்து கொண்டு கணக்கெ. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் எனக் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story