குடிநீர் குழாய்களை சேதப்படுத்திய யானை- வீடியோ வைரல்!

குடிநீர் குழாய்களை சேதப்படுத்திய  யானை- வீடியோ வைரல்!

குடிநீர் குழாய்களை சேதப்படுத்திய யானை

விளை பொருட்களை சேதப்படுத்திய யானை ஊருக்குள் வருவதை வனத்துறையினர் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த பொது மக்கள்.
கோவை மாவட்டம் தடாகம் அருகே உள்ள பொன்னூத்து அம்மன் வனப்பகுதியில் தற்போது 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் மாலை மற்றும் இரவு நேரங்களில் வனத்தில் இருந்து வெளியேறி அருகே உள்ள குடியிருப்பு மற்றும் தோட்டங்களில் புகுந்து அதிகளவில் சேதம் ஏற்படுத்தி வருவதாக விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.இரவு நேரத்தில் திடிரென குடியிருப்பு பகுதிகளில் யானைகள் வருவதால் இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.நேற்று முந்தினம் தடாகம் இராமநாதபுரத்தில் வீட்டின் வெளியே தூங்கிக்கொண்டிருந்த சிவகாமி என்பவரை யானை தாக்கியதில் காலில் எழும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து வனத்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் இன்று தாளியூர் பகுதிக்குள் புகுந்த ஒற்றை யானை மலர்விழி என்பவரது தோட்டத்திற்குள் புகுந்து அங்கிருந்த பைப்புகளை சேதப்படுத்தியதுடன் தொட்டியில் தண்ணீர் குடித்துவிட்டு அருகில் உள்ள தோட்டத்திற்குள் புகுந்தது.அங்கு பயிரிடபட்ட தென்னை மற்றும் பாக்கு மரங்களை சேதப்படுத்தி வருவதை கண்டு இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கபட்டது.இதனை தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.அப்பகுதி விவசாயிகள் கூறுகையில் இரவு நேரங்களில் ஊருக்குள் வரும் யானைகளால் விவசாயம் பயிர்கள் முற்றிலும் சேதமடைவதாகவும் அதிக நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறியவர்கள் பலர் விவசாயத்தை கைவிடும் சூழல் உருவாகியுள்ளதாக தெரிவித்தனர்.விவசாயத்தை காக்க வேண்டும் எனில் யானைகள் ஊருக்குள் வருவதை வனத்துறையினர் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இதனிடையே தோட்டத்திற்குள் புகுந்த யானை தண்ணீர் பைப்புகளை சேதப்படுத்திவிட்டு தண்ணீர் குடித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வளைதளங்களில் பரவி வருகிறது.

Tags

Next Story