தடாகம் அருகே யானை கூட்டம் முகாம் - விவசாயிகள் அச்சம்
பைல் படம்
கோவை:தடாகம் வனப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.இந்த யானைகள் இரவு நேரங்களில் அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில் யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளிவரும் போது வனப்பகுதிக்குள் திருப்பி அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில் தடாகம் அடுத்த பொன்னூத்து வனப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நேற்று மாலை ஊருக்குள் புகுவதற்கு தயாராக வன எல்லையில் நின்று கொண்டிருந்ததை அப்பகுதி இளைஞர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.யானைகள் நுழைவதை கட்டுப்படுத்த வேண்டும் என தொடர்ந்து வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வருவதாகவும் யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளி வரும்போது வனத்திற்குள்ளேயே விரட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags
Next Story