வீட்டுக்கு வெளியே நின்ற யானை - அலறியடித்து ஓடிய தம்பதி!
சிசிடிவி காட்சி
கோவை மாவட்டம் மருதமலை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சுமார் 11 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.இந்த யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் ஊருக்குள் வலம் வருவதும், யானைகளை வனத்துறையினர் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.இந்த நிலையில் நேற்று இரவு மருதமலை அருகே உள்ள ஐ.ஓ.பி காலணி குடியிருப்பில் வாக்கிங் செல்வதற்காக தம்பதியர் வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளனர்.
அப்போது அங்கு உணவு மற்றும் தண்ணீர் தேடி உலா வந்த ஆண் காட்டு யானை ஒன்று அவர்களை வீட்டின் கேட் வரை விரட்டிய நிலையில் அச்சமடைந்த இருவரும் பதறி அடித்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடினர்.இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி, வாட்ஸ்அப்,பேஸ்புக், இன்ஸ்டாகிராம்,எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.