குட்டூர் ஏரி பகுதியில் ஒற்றை யானை தஞ்சம்

தருமபுரி குட்டூர் பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தர்மபுரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குட்டூர் ஏரி பகுதியில் இன்று காலை ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று சுற்றி திரிந்தது. உடனடியாக தகவலறிந்த வனத்துறையினர், காவல் துறையினர், ஊருக்குள் புகுந்த யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனைத்தொடர்ந்து இந்த யானை அப்பகுதியில் விவசாய நிலத்தில் வலம் வந்தது, யானையை கண்ட மக்கள் அச்சமடைந்த நிலையில் சத்தமிட்டும் கூச்சலிட்டு வருவதால் அச்சமடைந்த யானை ஏரி பகுதியில் மரம் அதிகமாக சூழ்ந்த புதர் ஒன்றில் தஞ்சமடைந்துள்ளன. குறிப்பாக கடந்த நான்கு நாட்களாக தர்மபுரி நகர பகுதியை ஒட்டியுள்ள கிராம பகுதிகளில் இந்த ஒற்றை யானை சுற்றி வலம் வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ள நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறை அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து வனப்பகுதிக்குள் யானையை விரட்டும் பணியில் வனத்துறை முயற்சி செய்து வருகின்றனர்.கோடைகாலம் துவங்கவதற்கு முன்பாகவே வனப்பகுதிகள், மலைப்குதிகள் வறண்டு வருவதால், உணவு தண்ணீர் தேடி யானை வனத்தைவட்டு வெளியே வந்திருக்கிறது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story