ஆசனூர் அருகே கூட்டமாக சாலையை கடந்த யானைகள்: பார்த்து ரசித்த பயணிகள்

ஆசனூர் அருகே கூட்டமாக சாலையை கடந்த யானைகள்: பார்த்து ரசித்த பயணிகள்
சாலையை கடந்த யானைகள்
ஆசனூர் அருகே கூட்டமாக சாலையை கடந்த யானைகள் பயணிகள் பார்த்து ரசித்தனர்.

ஆசனூர் அருகே கூட்டமாக சாலையை கடந்த யானைகள் பார்த்து ரசித்த பயணிகள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான்கள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இதில் ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. யானைகள் உணவு, தண்ணீர் தேடி இடம் பெயர்வது வழக்கம். இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்,

ஆசனூர் அடுத்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை கூட்டம் உணவு - தண்ணீர் தேடி சாலையைக் கடந்து சென்றது. அப்போது அந்த வழியாக சென்ற அரசு பேருந்து ஒட்டுனர் யானை கூட்டத்தை கண்டகம் பேருந்தை நிறுத்தி கொண்டார். யானைகள் சாலையை கடந்து செல்வதை பார்த்து ரசித்தார்.

இதே போல் மற்ற வாகன ஓட்டிகளும் தங்களது வாகனத்தை நிறுத்தி நேரத்தில் அந்த யானைகள் கூட்டம் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னர் வாகன ஓட்டிகள் சென்றனர்.

Tags

Next Story