வாழைத்தோட்டத்தை நாசம் செய்த யானைகள்

தாளவாடி அருகே வாழை தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள், மரங்களை மிதித்து சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வாழை தோட்டத்தை நாசம் செய்த யானைகள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே இரியபுரம் பகுதியை சேர்ந்தவர் வாணி சென்னஞ்சப்பா. இவருக்கு சொந்த மான வாழை தோட்டத்தில், நேற்று அதிகாலை யானைகள் புகுந்தன. தின்றும், மிதித்தும், 1,500க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதம் செய்தன. இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். சேதமடைந்த வாழை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். யானைகள் நுழையாதவாறு தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story