வேப்பனப்பள்ளி அருகே விவசாய நிலத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்

வேப்பனப்பள்ளி அருகே விவசாய நிலத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்

யானை சேதப்படுத்திய பயிர்கள்

வேப்பனப்பள்ளி அருகே விவசாய நிலத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்த நேர்லகிரி வனப்பகுதியில் மூன்று காட்டு யானைகள் மூகாமிட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில் முகாமிட்டுள்ள 3 காட்டு யானைகள் சுற்றுவட்டார பகுதி விவசாய நிலங்களில் புகுந்து விவசாய பயிர்களை செய்துப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலை வேப்பனப்பள்ளி அருகே உள்ள கட்டாயமேடு கிராமத்தில் உள்ள சுப்பிரமணி என்பவருடைய விவசாய நிலத்தில் புகுந்த 3 காட்டு யானைகள் ஒரு ஏக்கர் தக்காளி தோட்டத்தை நாசம் செய்துள்ளது. காலையில் வந்து விவசாயி தோட்டத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து வனத்துறை தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த வனத்துறையினர் 3 காட்டு யானைகளை வனப்பகுதி விரட்டும் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இப்பகுதிகளில் காட்டு யானை விவசாய நிலத்தில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் இந்த காட்டு யானைகள் வேறு வனப்பகுதி விரட்ட வேண்டும் என விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Tags

Next Story