வீட்டுக்குள் நுழைந்த யானைகள்... அலறி அடித்து ஓடிய உரிமையாளர்கள் !

வீட்டுக்குள் நுழைந்த யானைகள்... அலறி அடித்து ஓடிய உரிமையாளர்கள் !
கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானை கூட்டத்தால், அதன் உரிமையாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

கோவை:மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் யானைகளின் வலசை காலம் துவங்கி உள்ள நிலையில் கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள தமிழக வனப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது.மேலும் சில தினங்களாக மருதமலை வனப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் காணப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பெண் யானை மற்றும் அதன் குட்டி ஐஓபி காலனி மாலதி நகர் பகுதிக்குள் புகுந்தது. பின்னர் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வந்த யானைகள் குமார் என்பவரது வீட்டிற்குள் நுழைய முயன்றது.

இதனை அடுத்து வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டின் மாடிக்கு சென்றுள்ளனர் வீட்டின் உள்ளே நுழைந்த யானைகள் உணவுப் பொருட்கள் ஏதேனும் உள்ளதா என பார்த்துவிட்டு திரும்பி எதுவும் கிடைக்க பெறாத நிலையில் திரும்பி சென்றன.யானைகள் வலம் வருவதாக கிடைக்க பெற்ற தகவலையடுத்து அங்கு விரைந்த வந்த வனத்துறையினர் அவற்றை மீண்டும் வன பகுதிக்கு விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்பொழுது குட்டி யானை முன்னே சென்றுவிட பின்னால் வந்த பெண் யானை வனத்துறை வாகனத்தை விரட்டிய நிலையில் வனத்துறையினர் இரு யானைகளையும் வனப்பகுதிகளுக்குள் விரட்டியடித்தனர்.தற்போது அதன் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.


Tags

Next Story