வனப்பகுதியில் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்த யானைகள் !

வனப்பகுதியில் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்த யானைகள் !

யானைகள்

கோடுபட்டி வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகள் 15ம் மேற்பட்ட யானைகள் கூட்டமாக வந்து தண்ணீரை குடித்து வீச்சு அடித்தும் குதூகலித்து மகிழ்ந்தனர்.

தர்மபுரி மாவட்டம். பாலக்கோடு வனச்சரக எல்லையில், காப்புக்காடு கோடுப்பட்டி வனப்பகுதியில் யானைகள் அதிகம் உள்ளன.

குறிப்பாக, கர்நாடக யானைகள் தற்போது இடம்பெயர்ந்து கோடுப்பட்டி பகுதியில் முகாமிட்டுள்ளன.யானைகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாதவாறு இருக்க வனத் துறை சார்பில் சிமெண்ட் தரைத்தள குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குடிநீர் தொட்டியில் சூரிய ஒளியில் இயங்கும் மின் மோட்டார் மூலம் ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் எடுத்து தொட்டியில் நிரப்பப்படுகிறது.

காலை மற்றும் மாலை நேரங்களில் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து குடித்தும், உடல் சூட்டை தண்ணீர் பீய்ச்சி அடித்தும் யானைகள் குதூகலிக்கின்றன. ஒரே நேரத்தில் 15க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்தன.

இதுகுறித்து வனத்துறை வனச்சரகர் நடராஜ் கூறுகையில், பாலக்கோடு வனச்சரகத்தில் யானைகள் நடமாட் டம் அதிகமாக உள்ளன.கோடைக்காலம் என்பதால் வனத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கவன விலங்குகளின் தாகத்திற்காக தண்ணீர் தொட்டிகள் கட்டி வைக்கப்பட்டுள்ளது.

அந்த எப்போதும் தண்ணீரை வனத்துறையினர் நிரப்பி வைக்கின்றனர். யானைகள் குட்டிகளுடன் 15க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் தண்ணீர் தொட்டியை பார்த்ததும் ஓடி வந்து குடித்தும், துதிக்கையால் தனது உடல் முழுவதும் பீய்ச்சி அடித்தும் குதூகலித்தன.

மேலும் இந்த வனப்பகுதியில் பொதுமக்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story