கடையநல்லூா் மலையடிவாரத்தில் யானைகள் நடமாட்டம்
யானை
கடையநல்லூா் மலையடிவாரத்தில் யானைகள் நடமாட்டம்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் மலையடிவாரம் காசிதா்மம் அருகேயுள்ள சின்னகாட்டுப் பகுதியில் ஏராளமான தென்னை , வாழை,நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் இரண்டு யானைகள் சுற்றி திரிந்ததாக விவசாயிகள் தெரிவித்தனா். மேலும், யானைகள் விளை பயிா்களைச் சேதப்படுத்தும் என்பதுடன், விவசாயிகள் மற்றும் தொழிலாளா்களை தாக்கும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா். எனவே, யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Next Story