உடல் வெப்பத்தை தணிக்க தண்ணீரில் உற்சாக குளியல் போட்ட யானைகள்

உடல் வெப்பத்தை தணிக்க தண்ணீரில் உற்சாக குளியல் போட்ட யானைகள்

  மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள மறுவாழ்வு மையத்தில் உடல் வெப்பத்தை தணிப்பதற்காக யானைகள் தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தன.

மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள மறுவாழ்வு மையத்தில் உடல் வெப்பத்தை தணிப்பதற்காக யானைகள் தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தன.

மறுவாழ்வு மையத்தில் உடல் வெப்பத்தை தணிக்க ஷவரில் உற்சாக குளியல் போட்ட யானைகள் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் உடல் வெப்பத்தை தணிப்பதற்காக யானைகள் ஷவரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தன.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே எம்.ஆர்.பாளையத்தில் உள்ள காப்புக்காட்டில் யானைகள் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகின்றது. வனத்துறை சார்பில் இங்கு 11 யானைகள் பராமரிக்கப்பட்டு வரு கிறன. தற்போது கோடை வெயில் சுட்டெரிப்பதால் யானைகள் குளிக்கவும், உடல் உஷ்ணத்தை தணிக்க சேற்றுக்குளியல் போடவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

யானைகளுக்கு காலையில் ஷவர் குளியலுக்கு ஏற்பாடு செய்ப்படுகிறது.அதன்பிறகு தண்ணீர் சத்துள்ள பழங்கள் கொடுக்கப்பட்டு, சிறிது நேரத்தில் அங்குள்ள சேற்றில் விளையாட விடுகிறார்கள்.இதற்காக பெரிய அளவில் குளம்போல் சேறு உருவாக்கப்பட்டு உள்ளது. அதில் கொண்டுபோய் விடப்பட்டதும் யானைகள் சேற்றில் உருண்டு புரண்டு உடல்வெப்பத்தை தணித்து ஆனந்தமடைகிறது. இதனால் யானைகள் கோடை வெயிலிலும் குதூகலமாக பொழுதை கழிக்கின்றன.

Tags

Next Story