கடனுதவி பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

கடனுதவி பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
X

மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன்

தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்களான பொருளாதார மேம்பாட்டு திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்புத்திட்டம் நிலம் மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களை ஒருங்கிணைத்து, ‘முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் என்கின்ற பெயரில் ரூ.40.00 கோடி செலவினத்தில் புதிய திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. இந்த புதிய திட்டத்தின்படி ஆதிதிராவிடர்களுக்கான தனிநபர் திட்டத்தொகையில் முன்விடுப்பு மானியமாக விடுவிக்கப்படும் தொகை 30 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக உயர்த்தவும் அல்லது அதிகபட்சமாக ரூ.3.50 இலட்சம் இதில் எது குறைவானதோ அதை கடன் வழங்கும் வங்கிக்கு வழங்கவும் மற்றும் பழங்குடியினருக்கு திட்ட மதிப்பீட்டில் 50 விழுக்காடு அல்லது ரூ.3,75,000/- இவற்றில் எது குறைவானதோ அத்தொகையை மானியமாகவும் 6 சதவிகித வட்டி மானியத்தினை அரையாண்டிற்கு ஒருமுறை சம்மந்தப்பட்ட வங்கிகளிடமிருந்து பெற்று, ஒத்திவைப்பு காலம் உட்பட முழுவதுமாக திரும்ப செலுத்தும் காலம் வரை வட்டி மானியம் பெறுவதற்கான தகுதிகளின் அடிப்படையில் வழங்கப்பட இருப்பதாகவும், எனவே இத்திட்டத்தில் தகுதியான பயனாளிகள் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Next Story