ஆவின் பொருட்கள் விற்பனைக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

X
ஆவின் பொருட்கள் விற்பனை செய்ய விண்ணப்பிக்கலாம்
சேலம் ஆவின் பொருட்களை விற்பனை செய்ய மொத்த விற்பனையாளர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவின் பொது மேலாளர் குமரேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:, சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் பால் உப பொருட்களான நெய், வெண்ணெய், பாதாம் பவுடர், பால் பவுடர், இனிப்புகள், நறுமணப்பால், பனீர் வகைகளும் மற்றும் பல்வேறு சுவைகளிலும், அளவுகளிலும் ஐஸ்கீரீம் வகைகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. பால் உபபொருட்கள் மற்றும் ஐஸ்கிரீம் விற்பனைக்கு மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க வருகின்ற 23-ந் தேதி கடைசி நாளாகும். மேலும் தகவலுக்கு சித்தனூர் தளவாய்ப்பட்டியில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
