முதலமைச்சரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்

முதலமைச்சரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்

மாவட்ட ஆட்சியர் 

பெரம்பலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் விண்ணபிக்க தகுதியுள்ளவர்கள் சமூக நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் 18 வயது நிறைவடைந்த 441 பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகை ரூ.1,49,78,112/- (ரூபாய் ஒரு கோடியே நாற்பத்தி ஒன்பது இலட்சத்து எழுபத்தி எட்டாயிரத்து நூற்றி பணிரெண்டு) முதிர்வு தொகை பெற்று வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்துள்ள 18 வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளுக்கு திட்டத்தில் பயன்பெற பயனாளிகள் பெரம்பலூர் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் தங்களது வைப்புத்தொகை பத்திரம், பெண்குழந்தையின் பத்தாம் வகுப்பு சான்றிதழ், வங்கிகணக்கு புத்தகம், தாய் மற்றும் குழந்தையின் புகைப்படம் ஆகியவற்றுடன் வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் ஆகியநாட்களில் மாவட்டசமூக நல அலுவலகத்தினை அணுகி விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story