காரைக்குடி அருகே எல்கை மாட்டுவண்டி பந்தயம்
மாட்டுவண்டி பந்தயம்
சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே நெற்புகப்பட்டியில் செங்கோலுடைய அய்யனார் கோவிலில் காவடி எடுப்பு உற்சவ விழாவை முன்னிட்டு, மாட்டுவண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது.
இதில், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து 53 ஜோடி மாடுகள் பங்கேற்றன. கல்லல் சாலையில் நடைபெற்ற இப்போட்டியில் பெரியமாட்டில் 17 ஜோடி மாடுகளும், சிறிய மாட்டில் 36 ஜோடி மாடுகளும் என மொத்தம் 53 ஜோடி மாடுகள் பங்கேற்றன. பெரிய மாட்டிற்க்கு 8 மைல் தூரமும், சிறிய மாட்டிற்கு 6 மைல் தூரமும் பந்தய எல்லைகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இப்போட்டியில், வெற்றி பெற்று முதல் இடத்தை பெற்ற பெரிய மாட்டின் உரிமையாளருக்கு ரூ 12 ஆயிரம் ரொக்கமும், இரு பிரிவுகளாக நடைபெற்ற சிறிய மாட்டு பந்தயத்தில் இரு பிரிவுகளிலும் முதல் இடத்தை பிடித்த உரிமையாளருக்கு முதல் பரிசாக ரூ 12 ஆயிரம் ரொக்க பரிசாக வழங்கப்பட்டது. பந்தயத்தில் மாடுகள் ஒன்றோடு ஒன்று முந்தி கொண்டு சீறி பாய்ந்து சென்றது. மிகவும் விறுவிறுப்பாக, நடைபெற்ற போட்டியினை, மானகிரி, நெற்புகப்பட்டி, கல்லல், மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று உற்ச்சாகமாக கண்டு ரசித்தனர்.