குதிரைகளுக்கான எல்கை பந்தயம் - ஆலோசனை கூட்டம்

குதிரைகளுக்கான எல்கை பந்தயம் - ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம் 

திருக்கடையூரில் காணும் பொங்கல் அன்று பிரசித்தி பெற்ற குதிரைகளுக்கான எல்கை பந்தயம் நடைபெற உள்ளதை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு காணும் பொங்கல் அன்று எல்கை பந்தயம் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் திருக்கடையூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.

திமுக ஒன்றிய செயலாளர் அமிர்த விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் போலீசாரின் ஒத்துழைப்புடன் எல்கை பந்தயத்தை சிறப்பாக நடத்துவது, எல்கை பந்தயத்தை நிர்வாகிகள், விழா குழுவினர் மற்றும் திருக்கடையூர், டி.மணல்மேடு, பிள்ளை பெருமாள் நல்லூர், மாணிக்கப்பங்கு, காழியப்பநல்லூர், கிள்ளியூர், தில்லையாடி ,ஆகிய 7 ஊராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர்கள் இணைந்து சிறப்பாக நடத்துவது, விழாவிற்கு அமைச்சர், எம்பி, எம்எல்ஏ மற்றும் முன்னாள் எம்எல்ஏவை அழைப்பது என தீர்மானிக்கப்பட்டது.

மேலும் கூட்டத்தில் எல்கை பந்தயம் நடத்துவதற்கு விஜயகுமார் தலைமையில் விழா குழு அமைக்கப்பட்டது. ஜனவரி 17ஆம் தேதி நடைபெறும் இந்த போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகை தரும் மாடு மற்றும் குதிரை வண்டிகளின் போட்டியாளர்கள் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story