எல்லைப்பிடாரியம்மன் கோவில் திருவிழா
திருவிழா
சேலம் மாவட்டம் , குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரியம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சேலம் குமாரசாமிப்பட்டியில் மிகவும் பிரசித்தி பெற்ற எல்லைப்பிடாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு பங்குனி திருவிழா கடந்த 19-ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது. விழாவை முன்னிட்டு நேற்று மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு ஆட்டம், பாட்டத்துடன் கோவிலுக்கு முளைப்பாரி மற்றும் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாவிளக்கு ஊர்வலத்தை முன்னிட்டு நேற்று கோவில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இன்று (புதன்கிழமை) காலை 6 மணிக்கு அம்மன் ஊர்வலம் நடக்கிறது. தொடர்ந்து அலகு குத்துதல் நடக்கிறது. பின்னர் மதியம் 12 மணிக்கு பொங்கல் வைத்தல் நடக்கிறது. இரவு 7 மணிக்கு அக்னி கரகம், பூங்கரகத்துடன் மின் விளக்கு அலங்காரத்தில் புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story