எமதர்மர், சித்திரகுப்தர் வேடம் அணிந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

ராசிபுரத்தில் எமதர்மர், சித்திரகுப்தர் வேடம் அணிந்து இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு பாசக் கயிறை வீசி எச்சரிக்கை விடுத்து நூதன விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
தேசிய சாலை பாது காப்பு மாத விழாவை யொட்டி நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகம் , ராசிபுரம் மோட்டார் வாகன பகுதி அலுவலகம் மற்றும் ராசிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் புதிய பஸ் நிலையத் தில் முன்பு தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாக னத்தில் வருபவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எமதர்மன், சித்திரகுப்தர் வேடமணிந்து நடன கலைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் இடத்திலும், மேலும் நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் வந்த நபர்களிடத்திலும் எமதர்மராஜன் மற்றும் சித்திரகுப்தர் பாச கயிற்றை வீசி அவர்களுக்கு அறிவுரை கூறினர். இந்நிகழ்ச்சியில் நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன், மோட்டார் வாகன ஆய்வாளர் சக்திவேல் , போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் நடராஜன், முத்துசாமி ராசிபுரம் அரசு போக்குவரத்து பணி மனை மேலாளர் செங்குட்டு வேல் மற்றும் ராசிபுரம் போக்குவரத்து அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி தலைக்கவசம் அணியாத வந்தவரிடம் தலைக்கவசம் அணிந்து தான் வாகனம் இயக்குவேன் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் எமதர்ம ராஜா மற்றும் சித்திரகுப்தர் போல் வேடம் அணிந்த நடைபெற்ற இந்த நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.

Tags

Next Story