ராமநாதபுரம்: இமானுவேல் சேகரனார் நூற்றாண்டு விழா

ராமநாதபுரம்: இமானுவேல் சேகரனார் நூற்றாண்டு விழா

இமானுவேல் சேகரனார் நூற்றாண்டு விழா

ராமநாதபுரம் தியாகி இமானுவேல் சேகரனாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மகா சக்தி இந்திரன் அறக்கட்டளையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள காமராஜபுரம் மற்றும் கொழுந்துறை கிராமங்களில் மகா சக்தி இந்திரன் அறக்கட்டளையின் சார்பில் இமானுவேல் சேகரனார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தியாகி இமானுவேல் சேகரனாரின் புதல்வி பிரபா ராணி கலந்து கொண்டு 300க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச சேலை மற்றும் நலத்திட்ட பெட்டகங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து சிறுவயதில் தனது தந்தை தியாகி இமானுவேல் சேகரனார் கொழுந்துறை கிராமத்திற்கு அழைத்து வந்து விவசாயிம் கற்று கொடுத்ததாக கண்ணீர் மல்க உருக்கமாக பேசினார். மேலும், இந்த அறக்கட்டளையின் சார்பில் பெற்றோரை இழந்து வாடும் ஆதரவற்ற மாணவர்களுக்கு உதவும் விதமாக கல்வி பயிற்றுவிப்பதில் ஆர்வம் காட்டி வருதாக அறக்கட்டளையின் நிறுவனர் மலைக்கண்ணு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தலைவர் சந்திரன், துணைத் தலைவர் பாலமுருகன், நிர்வாக அருங்காவலர் ராஜேந்திரன், செயலாளர் சண்முகம், உயர் நீதிமன்ற வழக்கறிஞரும் சட்டஆலோசகரமான சகுந்தலா தேவி, டாக்டர் ஜெயசங்கர், பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் என பலர் கொண்டு பயன் பெற்றனர்.

Tags

Next Story