தாராபுரம் நகராட்சியில் அவசர ஆலோசனை கூட்டம்

தாராபுரம் நகராட்சியில் அவசர ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம் 

தாராபுரம் நகராட்சியில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் புதிய தார் சாலை காங்கிரசாலை அமைக்க ஒரு 3.31 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக நகராட்சி தலைவர் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நகர் மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் தலைமை தாங்கினார். ஆணையாளர் திருமால் செல்வம் மற்றும் துணைத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வைகித்தனர். அப்போது தாராபுரத்தில் புதிய தார் சாலை அமைக்க ரூபாய் 1.67 கோடியும், மழைநீர் வடிகால் மற்றும் கான்கிரீட் சாலை அமைக்க ரூபாய் 1.20 கோடியும், நூலகத்திற்கு புதிய கூடுதல் கட்டிடம் கட்ட ரூபாய் 44 லட்சம் என மொத்தம் ரூபாய் 3.31 கோடிக்கண பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தம் கோரப்பட்டதாக நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் கூறினார்.

மேலும் இக்கூட்டத்தில் தாராபுரத்தில் இருந்து சென்னைக்குச் சென்று வர இரண்டு புதிய பேருந்துகளை தொடங்கி வைத்த தமிழ் வளர்ச்சி மற்றும் செயல் துறை அமைச்சர் மு.பே சாமிநாதன் மற்றும் ஆயுதாவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் திட்ட நிதி வழங்கிய நகராட்சி துறை அமைச்சர் கே என் நேரு, ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மன்ற கூட்டத்தில் மொத்தம் 56 தீர்மானங்கள் மன்ற பொருளாளர் கொண்டுவரப்பட்டது. அவை அனைத்தும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

பின்னர் நகராட்சி தலைவர் கூறுகையில் தாராபுரம் நகராட்சி பணிக்கு தொடர்ந்து நிதி ஒதுக்கி மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வரும் முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார நகராட்சி பணிக்கு குடிநீர் வசதி புதிய தார் சாலை, நூலகத்திற்கு கூடுதல் கட்டிடம் ஆகியவை அமைக்க மொத்தம் ரூ.3.31 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கோரப்பட்டது. கூடிய விரைவில் இந்த பணிகள் நிறைவேற்ற வேண்டும் என்றார் அப்போதே நகராட்சி கவுன்சிலர்கள் எஸ் முருகானந்தன், ராஜேந்திரன், ஹை டெக் அன் பழகன், கமலக்கண்ணன் முபாரக் அலி, யூசுப், சீனிவாசன்,செலின் பிலோமினா, சக்திவேல், ஸ்ரீதரன்,ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story