பெரம்பலூர் மாவட்ட மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் அவசரக் கூட்டம்
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள தனியார் கட்டிடத்தில் பெரம்பலூர் மாவட்ட மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் அவசரக் கூட்டம் மே 25ஆம் தேதி மாலை 5 மணி அளவில் நடைபெற்றது மாவட்டச் செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரம்பலூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்.,
பெரியசாமிவரவேற்புரையாற்றியனார் .பெரம்பலூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் வாஞ்சிநாதன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இராஜேந்திரன், மார்ட்டின், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், கடந்த 1995 ஆண்டு முதல் பெரம்பலூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு மத்திய அரசின் மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி இல்லாத 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்பதில் இரண்டு கட்டங்களாக அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள் ளது.
இவற்றில் பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரம்பலூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்பது மேலும் கால தாமதம் ஏற்படும் என்பதாலும்,
ஏற்கனவே தமிழக அரசின் மருத்துவ துறை அமைச்சர் அவர்களும், மாவட்ட ஆட்சியர் அவர்களும் அறிவித்த படி பெரம்பலூர் மாவட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் முதல் கட்டமாக அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுவதற்க்கு , மத்திய அரசும், . தமிழ்நாடு முதலமைச்சரும், போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுத்து பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி முதல் கட்ட நிலையிலேயே தொடங்கிட அதற்கான அனுமதியும்,
உரிய நிதி ஒதுக்கீடும் செய்து பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு பெரம்பலூர் மாவட்ட மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் அவசரக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானத்தின் வாயிலாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தின்நிர்வாகிகள்,
உறுப்பினர்கள்பலர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியின் இறுதியாக , பெரம்பலூர் நகர பொறுப்பாளர்காமராஜ் நன்றி தெரிவித்தார்.